ADDED : செப் 09, 2011 07:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருக்கும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மற்றும் சேலம் மேயர் சந்தித்து, நலம் விசாரித்தனர்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்க்க, முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செல்வராஜ், பெரியசாமி மற்றும் சேலம் மேயர் ரேகா ப்ரியதர்ஷினி ஆகிய நால்வரும் திருச்சி சிறைக்கு வந்தனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சவுந்திரபாண்டியன் ஆகிய மூவரையும் சந்தித்து, நலம் விசாரித்தனர். இந்தச் சந்திப்பு, 40 நிமிடம் நீடித்தது.