தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அதிரடி "ஷாக்" கொடுக்க அமைதி காக்கிறதா அதிமுக?

அதிரடி "ஷாக்" கொடுக்க அமைதி காக்கிறதா அதிமுக?

அதிரடி "ஷாக்" கொடுக்க அமைதி காக்கிறதா அதிமுக?


ADDED : மார் 25, 2016 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2016 07:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : கூட்டணிக்கு அழைப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, 'நாங்கள் தான் பலமான கூட்டணி...அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது நாங்கள் தான்' போன்ற அதீத நம்பிக்கை வார்த்தைகள் என தமிழக தேர்தல் களமே அல்லோலப்பட்டு கொண்டிருக்கிறது. இதில் விதிவிலக்காக இருப்பது அதிமுக மட்டும் தான். மற்ற கட்சிகளுக்கு, யாரும் எதிர்பார்க்காத அதிரடி 'ஷாக்' கொடுப்பதற்காகவே அதிமுக தொடர்ந்து அமைதி காப்பதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரசார அட்டவணை, கூட்டணி கட்சிகள் பற்றிய இறுதி பட்டியல், தொகுதி பங்கீடு என அனைத்தையும் 'சஸ்பென்ஸ்' ஆக வைத்துள்ளது அதிமுக. ஆனால், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி பங்கீட்டையும் ஏறக்குறைய அதிமுக முடிவு செய்து விட்டதாம். 200 தொகுதிகள் வரை அதிமுக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் ஏற்கனவே தயார் செய்து விட்டார்களாம்.

பெண்கள், படித்தவர்கள், இளைஞர்கள் என அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதும் உறுதியாகி விட்டதாம். அதேசமயம், பிற கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கு மிக்க பிரபலங்களை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக திமுக, பாமக, தேமுதிக.,வின் முதல்வர் வேட்பாளர்களான ஸ்டாலின், அன்புமணி, விஜயகாந்த்திற்கு எதிராக வலுவான போட்டியை தரக்கூடிய வேட்பாளர்களை அதிமுக களமிறக்கப் போகிறதாம். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனையும், விஜயகாந்திற்கு எதிராக அவர் கட்சியில் இருந்து விலகி அதிமுக.,வில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரனையும், அன்புமணிக்கு எதிராக பாமக.,வில் கருத்து வேறுபாடு காரணமாக விலகி தனிக்கட்சி துவங்கிய வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனையும் நிறுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.

முதல்வர் வேட்பாளர்களுக்கு எதிராக பண்ருட்டிக்காரர்களை இறக்க திட்டமிட்டுள்ளதை போல் இன்னும் யார் யாருக்கு எதிராக யாரையெல்லாம் களமிறக்க திட்டமிட்டுள்ளார்களோ என்ற பீதியும் அரசியல் வட்டாரத்தில் காணப்படுகிறது. மொத்தத்தில் சட்டசபை தேர்தல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரிக்கும் என்பதுடன், பிரசாத்தின் போது அக்னிவெயிலுக்கு இணையாக அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us