UPDATED : செப் 28, 2011 06:06 PM
ADDED : செப் 28, 2011 11:56 AM

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு கருமண்டபம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்ததில் அதில் இருந்த ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் இருந்த கனகராஜ் என்ற கான்டிராக்டரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், காலை, 11 மணியளவில் நடந்த சோதனையில் போது, தேனியைச் சேர்ந்த ரவிவர்மா என்ற விவசாயி, 1.60 லட்சம் ரூபாயை தனது காரில் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.அவரிடம் பணத்தை கொண்டு வந்ததுக்கான ஆவணம் ஏதுமில்லை என்பதால், அவருடைய பணத்தையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடக்கும் வாகன சோதனையில், ஒருநாளில் மட்டும் கருமண்டபம் செக்போஸ்டில், 4.60 லட்சம் ரூபாய் முறையான கணக்கு இல்லாமல் கொண்டு வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.