ADDED : அக் 05, 2011 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : உள்ளாட்சி தேர்தலில் 49'ஓ படிவம் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
ஜனநாயகத்தின் மீதும், வேட்பாளர் மீதும் நம்பிக்கை இல்லை போன்ற காரணங்களால் ஓட்டளிக்க விரும்பாதவர்கள் இப்படிவத்தை பயன்படுத்துகின்றனர். இத்தகைய வாக்காளர்கள் எத்தனை சதவீதம் பேர் என்பதை அறிந்து, அதனை கமிஷன் பதிவு செய்து கொள்ள இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது.இம்முறை லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்டது.
தேசிய மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ள'வாக்காளர்களுக்கான சுதந்திரம்' என்ற கருத்தின் அடிப்படையில் இப்படிவம் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் இப்படிவம் பயன்படுத்தப்படுத்துவது குறித்து கமிஷன் ஆலோசித்து வருகிறது.

