ADDED : செப் 06, 2011 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி, மதுரை மாவட்டங்களில், ஆவின் நிர்வாகம் லாபத்தில் இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு லாபம் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு ஆண்டிலும், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 50 காசு போனஸ் வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு பின் இந்த போனஸ் தொகை வழங்கப்படும். இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரம் பேரும், தேனி மாவட்டத்தில் 11 ஆயிரம் பேரும் பயன்பெறுவர். வழக்கமான பட்டுவாடா நடக்கும் இன்டர்நெட் பாங்கிங் முறையிலேயே போனசும் தாமதமின்றி வழங்கப்பட உள்ளது.