ADDED : ஆக 05, 2024 09:42 PM
தி.மு.க., ஆட்சியில் எல்லாவற்றுக்குமே கமிஷன் தான். அதனால் தான், அவர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து விட்டது. 60 சதவீதம் கமிஷன் பெற்று தடுப்பணை கட்டினால், எப்படி தரமாக இருக்கும்.
ஊழல் ஆட்சி என்று சொல்வதற்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொள்கின்றனர்.
தமிழகத்தில் மதத்தின் பெயரால் ஹிந்துக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
திருச்செந்துறை கிராமம் முழுதும், வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர். தன்னுடைய நிலம் இல்லையென்றாலும், வக்பு வாரியம் ஒரு நிலத்தை தன்னுடையது என சொந்தம் கொண்டாடினால், அதை தடுக்க முடியாது. மத்திய அரசு வாயிலாக சட்டம் கொண்டு வந்துதான் இதற்கு தீர்வு காண வேண்டும். அப்பணியை மத்திய அரசு செய்யும்.
தர்மபுரியில் இரு கோவில் நிலங்களில் இருந்து, 198 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட்டை வெட்டி எடுத்து கடத்தி உள்ளனர். இதற்காக, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,