தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/61,000 ரேஷன் கார்டு தான் ஓராண்டில் வினியோகம்

61,000 ரேஷன் கார்டு தான் ஓராண்டில் வினியோகம்

61,000 ரேஷன் கார்டு தான் ஓராண்டில் வினியோகம்


ADDED : ஜூன் 29, 2024 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2024 01:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் நிவாரணம் போன்றவற்றை வாங்க ரேஷன் கார்டு அவசியம்.

ஆண்டுதோறும் சராசரியாக, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புது கார்டுகள் வழங்கப்படும். அதன்படி, 2022 - 23ல், 2.21 லட்சம் ரேஷன் கார்டுகளும்; அதற்கு முந்தைய ஆண்டில், 7.50 லட்சம் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2023 செப்டம்பரில் துவக்கியது. இதற்காக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பம் வழங்கப்பட்டு, அரசு விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனால், பலரும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். அந்தாண்டு ஜூலை முதல் பயனாளிகளுக்கு புதிய கார்டு வழங்கப்படவில்லை. எனவே, 2023 - 24ல், 61,047 ரேஷன் கார்டுகள் தான் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், புதிய கார்டு கேட்டு, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us