ADDED : ஆக 27, 2024 07:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய அரசு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவை நிதியை வழங்கிட கோரி முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித விவரம்:
மத்திய அரசின் சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மத்திய அரசு முதல் தவணையாக ரூ. 573 கோடி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் போன்ற முன்னோடி மாநிலங்கள் பள்ளிகல்வி, உயர் கல்வியில் பல சிறப்பான செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய முந்தைய ஆண்டிற்கான நிலுவைத்தொகை ரூ.249 கோடியும் ,தற்போது நிலுவையில் உள்ள நிதியையும் தாமதமின்றி விரைந்து விடுவிக்க வேண்டும். உரி நேரத்தில் நிதியை விடுவிப்பது அவசியம். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.