ADDED : ஜூலை 04, 2024 02:50 AM

மதுரை: மதுரை மேலமாசி வீதி பீமா ஜுவல்லரியின் 17 வது ஆண்டுவிழா ஜூலை 3 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. விழாவை வாடிக்கையாளர்களே குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர். நிர்வாகிகள், ஊழியர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது.
புதிய ஆண்டுக்கான முதல் தங்க நகை விற்பனையை தொழிலதிபர் பாலாஜி பெற்றுக்கொண்டார். வைர நகை விற்பனையை தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்னாள் முதல்வர் லட்சுமணன், யாதவா கல்லுாரி முன்னாள் பேராசிரியர் கல்யாணி, ஜெனட் மருத்துவமனை டாக்டர் ஜெனட் அனிதா பெற்றுக்கொண்டனர்.
ஆண்டிக் நகை முதல் விற்பனையை பழநியைச் சேர்ந்த கிருத்திகா, வெள்ளி முதல் விற்பனையை கவிதா பெற்றுக் கொண்டார்.
ஆண்டுவிழாவை முன்னிட்டு ரூ.17 ஆயிரத்துக்கு நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவருக்கும் தங்க நாணயம் இலவசம். வைர நகைகளுக்கு தங்க நாணயத்துடன் கேரட்டிற்கு ரூ.17 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய தங்க நகைகளுக்கு கூடுதலாக ரூ.100 வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு விற்பனைக்கும் ஆச்சரிய பரிசு உண்டு. தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றத்தை தவிர்க்க கிராமுக்கு ரூ.500க்கு முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
அதன்மூலம் முன்பதிவு நாள் விலை அல்லது ஆண்டுவிழா நாட்களின் விலையில் எது குறைவோ அவ்விலைக்கே தங்கத்தை வாங்கலாம்.
கிளை மேலாளர்கள் சென்றாயன், கார்மேகம், கார்த்திக் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.