ADDED : ஆக 03, 2024 09:15 PM
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் தி.மு.க., சார்பில் ஆர்பாட்டம் நடத்தினோம். பார்லி.,யிலும் பேசினோம். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.,வினர், அலட்சியமாக இருந்து விட்டனர்.
தமிழகத்தில் வெள்ளம் வந்த போது, 'ஏழு நாட்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம்' என்று சொன்னார்கள். 'அது உண்மை இல்லை' என, அப்போதே முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்தினார். அதேபோலவே, இப்போது கேரள நிலச்சரிவுக்கும் மத்திய அரசு தரப்பில் பொய் சொல்கின்றனர். பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, மத்திய அரசு உதவி செய்வது கிடையாது.
ஆனால், தங்களால் தான் எல்லாம் நடந்தது போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தையும் மத்திய அரசு பெரிய பாதிப்பாக கருதவில்லை; அதனால் தான், உரிய நிவாரணத்தை அறிவிக்கவில்லை. எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தயாராக இல்லை. அதனால் தான், அவர்களே தேசிய பேரிடர் என சொல்கிறோம்.
கனிமொழி, எம்.பி.,- தி.மு.க.,