'ஸ்டாலின் தான் வாராரு' பாடல் பிரசாரத்தில் தவிர்க்க தி.மு.க., முடிவு
'ஸ்டாலின் தான் வாராரு' பாடல் பிரசாரத்தில் தவிர்க்க தி.மு.க., முடிவு
UPDATED : மார் 30, 2024 02:15 AM
ADDED : மார் 30, 2024 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.,வின் மூன்றாண்டு கால செயல்பாடுகளில், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலதரப்பினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற நூறு சதவீத வெற்றியை இம்முறை தி.மு.க.,வால் பெற முடியுமா என்ற சந்தேகம் அக்கட்சியினருக்கே ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமைக்கும் கள நிலவரம் உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு ஏஜன்சிகள் வாயிலாக தகவலாகக் கிடைக்க அதிர்ந்து போய் உள்ளனர்.
இதற்கிடையில் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை மேலும் அதிகரித்து விடாமல் இருக்கவும், இருக்கும் அதிப்தியை குறைக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தி.மு.க., தலைமை திட்டமிட்டு, அதற்கான காரியங்களை செய்து வருகிறது....

