ADDED : மார் 23, 2024 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. இருப்பினும், தமிழக அரசு மீது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
பிரதமர் மோடி, சமீபத்தில் சென்னை, கன்னியாகுமரி மற்றும் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில், தி.மு.க., மற்றும் காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனால், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - பா.ஜ., இடையிலான போட்டியில் யார் வெல்ல போகின்றனர் என்பதை, மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துஉள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ., 19 தொகுதிகளிலும்; அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். அதன்படி, மொத்தம், 23 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டியிடுவதில், 12ல் தி.மு.க., உடன் நேரடியாக மோதுகிறது.

