விவேகானந்தர் மண்டபத்தில் தியானம்: மோடிக்கு தமிழக காங்., எதிர்ப்பு
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம்: மோடிக்கு தமிழக காங்., எதிர்ப்பு
UPDATED : மே 29, 2024 02:25 AM
ADDED : மே 28, 2024 09:39 PM

சென்னை: குமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியான நிகழ்வுக்கு அனுமதி தரக்கூடாது என தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி மே.30ம் தேதி தமிழகம் வருகிறார். கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், வரும், 30, 31, ஜூன் 1ல் தியானம் செய்கிறார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளதாவது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக மறைமுக வாக்கு சேகரிக்கும் விதமாக பிரதமர் மோடி குமரி வந்து தியானம் செய்வது தேர்தல் விதி மீறல். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இது போன்று நிகழ்வுகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரக்கூடாது.
அப்படியென்றால் நாங்களும் தியானம் செய்வோம். அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆணையத்திற்கு கடிதம் அளிக்க உள்ளோம் தேவை பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.