தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ 'நீட்' தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு

'நீட்' தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு

'நீட்' தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு


UPDATED : மே 31, 2024 05:45 AM

ADDED : மே 31, 2024 05:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2024 05:45 AM ADDED : மே 31, 2024 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'நீட்' தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, இம்மாதம் 5ம் தேதி, 4,750 தேர்வு மையங்களில் நடந்தது; 24 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள், மாணவ - மாணவியரின் விடைத்தாள் நகல்கள், அதற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் விபரங்களை, தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த நகல்களின் வழியாக, மாணவ - மாணவியர் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விடைகளுக்கான மதிப்பீட்டில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், நாளை இரவு 11:50 மணிக்குள், 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்கலாம். விபரங்களை, http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us