தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை: ஸ்டாலின் பெருமிதம்
தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை: ஸ்டாலின் பெருமிதம்
ADDED : ஆக 17, 2024 06:51 PM

சென்னை: தொழிற் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூரில் பெண்களுக்கான பிரத்யோக விடுதியை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது,
ரூ. 2000 கோடி முதலீட்டில் ஃ பாஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம் , ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தியும், தொழிற் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசின் நிடிஆயோக் குறியீட்டில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பெண்களுக்கான புதுமையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தெற்காசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி என்பதை தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.