ADDED : செப் 22, 2011 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:''பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்,'' என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: பரமக்குடியில் நடந்தது ஜாதிக் கலவரம் இல்லை.
போலீசார் அங்கு அத்துமீறியுள்ளனர். அங்கு அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவை விலக்க வேண்டும். நீதிவிசாரணை துவங்கும் முன் சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட நாளில் அதிகளவு கூட்டம் கூடும் என்ற நிலையிலும், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது பிரச்னைகளுக்கு காரணம், என்றார்.