sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவித கவிதை

/

கவித கவிதை

கவித கவிதை

கவித கவிதை


ADDED : அக் 05, 2011 10:54 PM

Google News

ADDED : அக் 05, 2011 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனநாயகன்



அள்ளிக் கொட்டியது செல்லுபடியாகாததால்

உள்ளாட்சித் தேர்தலில் 'அரிதார' கட்சிகள்

நெல்லிக்காய் மூடையென சிதறிப்போனதோ!

பொல்லாட்சியால் புறந்தள்ளப்பட்டவர்கள்

இன்று புதுவியூகம் வகுத்தது

உள்ளாட்சியிலும், ஊராட்சியிலும் கல்லா கட்டவோ!

ஏற்றிய ஏணியாய் இருந்தவர்களுக்கு, 'திகார்'

தீர்ப்பு திருப்தி தராததால்

காற்றில்லா பலூனாக எண்ணி 'கை'விட்டனரோ!

ஒன்றிரண்டு சீட்டுக்காக ஏலமிட்ட 'உதிரி'கள்

நன்றி கெட்டுப்போனதென

இன்று ஓலமிடும் எதிரிகளானதோ!

பொது, இடைத்தேர்தல்களில் மடை

திறந்து வந்த பணம், கடைத் தேர்தலில்

காணாது கலங்குகிறதோ, கரைவேட்டிகள்!

ஒவ்வொரு கட்சியும் ஒருவிதமாய் சிந்திக்க

ஓட்டளிக்கும் 'ஜனநாயகன்'

நாட்டுநலன் கருதி நடுநாயகனாய் இருப்பானா!

-ஜி.மனோகரன்








      Dinamalar
      Follow us