
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலையை சொறியும் சிங்கம் : ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு ம.தி.மு.க., சார்பில் நகர் செயலாளர் சிங்கம் போட்டியிடுகிறார்.
இவர் ராமநாதபுரத்தில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். வேட்பு மனுதாக்கல் செய்த நாளிலிருந்து இவரது கடையில், மாலை நேரங்களில் 'கிறக்கத்துடன்' வரும் உடன்பிறப்புகள், 'அண்...ணே... என் ஓட்..டூ, உங்...களுக்குத்தான்.. நீங்கதான் நகராட்சி தலைவ...ர்ர்ர்...' என, கூறியவாறு சிக்கன், மட்டன் புரோட்டா என ஒரு கை பார்த்துவிட்டு காசு கொடுக்காமல் 'எஸ்கேப்' ஆகிவிடுகின்றனர்.
சிங்கமோ, இதென்னடா வம்பா போச்சு... சாப்பிட வருபவர்களுக்கு முதலில் ஓட்டு இருக்கா... இல்லையான்னே தெரியலையே என தலையை சொறிகிறார். ஆனால் விபரம் தெரிந்த டாஸ்மாக் 'வாக்காள'நண்பர்கள், 'சிங்கம், சிக்கிடுச்சுல்ல... 17ம் தேதி வரை சைடிஷ் செலவு இல்லை' என 'சியர்ஸ்' சொல்லி கொள்கின்றனர்.

