ADDED : மார் 27, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கோடை வெயிலின் தாக்கத்தால், மாநிலம் முழுதும் எட்டு இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது; அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டியுள்ளது.
கரூர் பரமத்தி 39; மதுரை, நாமக்கல், திருப்பத்துார், திருச்சி, சேலம், தர்மபுரி, 38 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. மாநிலம் முழுதும் எட்டு இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி வெப்பநிலை பதிவாகிஉள்ளது.
இன்று முதல் 31ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.