sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!

/

36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!

36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!

36 வினாடிகளில் 100 மீட்டர்...! மழலையின் மலைக்க வைக்கும் சாதனை!

4


UPDATED : மார் 06, 2025 12:05 PM

ADDED : மார் 06, 2025 12:03 PM

Google News

UPDATED : மார் 06, 2025 12:05 PM ADDED : மார் 06, 2025 12:03 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி சேர்ந்த மூன்று வயது சிறுவன் 36 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளான்.

கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த முன்னாள் அரிமா சங்க தலைவர் சண்முக சுந்தரம், ராஜேஸ்வரியின் பேரனும், அரவிந்த், ராஷ்மிகா தம்பதியின் 3 வயது 3 மாதம் நிறைந்த மகன் யாத்விக் 100 மீட்டர் தூரத்தை 36 வினாடிகளில் கடந்து இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். இதனால் 3 வயது சிறுவனை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Image 1388842

இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறியதாவது: சிறுவனின் தந்தை சிறு வயது முதல் ஓட்டப்பந்தத்தில் ஆர்வம் கொண்டவர். பணிச்சுமை காரணமாக அந்த பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போகி உள்ளது. உசேன் போல்ட் வீடியோ பார்த்து தான் ஓட்டப்பந்தின் மீது ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்தை நாங்கள் உரிய முறையில் பயிற்சி அளித்து, இந்த சாதனையை புரிய வைத்துள்ளோம் என தெரிவித்தனர்.

Image 1388843

'எனது மகன் யாத்விக் போன்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சாதனை புரிய வைக்க வேண்டும்' என சிறுவனின் தாயார் வேண்டுகோள் விடுத்தார். மழலையின் மலைக்க வைக்கும் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us