தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்!
தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்!
UPDATED : ஏப் 19, 2024 05:37 AM
ADDED : ஏப் 18, 2024 01:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும். தமிழகத்தில் இன்று வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். வெப்ப அலை வீசும். சென்னையில் 2 நாட்களுக்கு 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

