sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்

/

தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்

தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்

தோட்டத்தில் 12 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் ஓட்டம்


ADDED : செப் 06, 2011 10:28 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை அருகே, இரண்டு எஸ்டேட்டுகளில், 12 காட்டு யானைகள் பகல் நேரத்திலேயே முகாமிட்டதால்,தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தனர்.



கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட்.

நேற்றுமுன்தினம் இரவு, ஐந்து காட்டு யானைகள், ரேஷன் கடை மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தின. தொழிலாளர்கள் மற்றும் வனத்துறையினர் திரண்டு, இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதற்கிடையே, பச்சமலை எஸ்டேட்டில், இரண்டு குட்டிகளுடன் ஏழு யானைகள், தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில், நேற்று பகல் முழுவதும் ஜாலியாக உலா வந்தன. இதனால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தனர். வால்பாறை வனச்சரக அலுவலர் லட்சுமணசாமி கூறுகையில், 'ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு வைப்பதால் தான், காட்டு யானைகள் அந்த வாசத்தில் அரிசியை ருசிக்க வருகின்றன. ரேஷன் அரிசி இருப்பு வைக்க வேண்டாம் என பலமுறை கூறியும், அவர்கள் அலட்சியமாக இருந்து விடுவதால், யானைகள் மீண்டும், மீண்டும் படையெடுக்கின்றன' என்றார்.








      Dinamalar
      Follow us