ADDED : மே 30, 2024 01:32 AM
சென்னை:தொழிலாளர் தேடி மருத்துவம் திட்டத்தில், 13,699 இணை நோயாளிகள் கண்டறியப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், 1.50 கோடி இணை நோயாளிகள், தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார் தொழிலாளர்களின் பணியிடங்களுக்கே சென்று, மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.
அதில், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளிட்ட இணை நோய்கள் கண்டறியப்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதன்படி, 2.65 லட்சம் தொழிலாளர்களுக்கு பல விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 13,699 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.