ADDED : ஜூன் 25, 2024 12:04 AM
சென்னை: “பள்ளிகல்வித்துறைக்கு இதுவரை நான்கு தவணையாக, 1.53 லட்சம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,” என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
சட்டசபையில் அவரது பதிலுரை:
அ.தி.மு.க., ஆட்சியில், 525 பள்ளிகளை தரம் உயர்த்துவதாக அறிவித்தனர். உரிய விதிமுறைகளை பின்பற்றாமல், 513 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.
மேலும், 364 பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு நிதியும் ஒதுக்கவில்லை. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதாக கூறுவது தவறு. நடப்பாண்டு மட்டும், 3.37 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அவரது பெயரில் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
வரலாற்றில் நினைவுகூரும் அளவிற்கு, இத்திட்டத்தின் பெயரை, 'முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம்' என, மாற்ற வேண்டும். பள்ளிகல்வித்துறைக்கு இதுவரை நான்கு தவணையாக, 1.53 லட்சம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மகேஷ் கூறினார்.