ADDED : மார் 15, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 17 பாரம்பரிய கட்டடங்கள், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். என தெரிவிக்கப்ட்டு உள்ளது.
பாரம்பரிய கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கத்துடன், சென்னை பல்கலை மெரினா வளாகத்தில் உள்ள கீழை கலையியல் ஆய்வு கட்டடம், ராணிபேட்டையில் உள்ள தேசிங்கு ராஜா ராணி நினைவகம், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆராய்ச்சி நிலையம், திருச்சியில் ராணி மங்கம்மாள் கோட்டை வளாக அலுவலகங்கள், துாத்துக்குடி எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் நினைவு இல்லம் உள்ளிட்ட 17 பாரம்பரிய கட்டடங்கள், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.