ADDED : செப் 14, 2011 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 15,16 தேதிகளில், சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெறும்.முதல் கட்ட கவுன்சிலிங், கடந்த 24ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடந்தது.
முதல் கட்ட கவுன்சிலிங்குக்கு பின் ஏற்பட்ட காலி இடங்களுக்காக, இப்போது இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.அரசு உதவி பெறும் கல்லூரிகளில், அனைத்து பாடப் பிரிவுகளிலும் உள்ள காலி இடங்களுக்கு, கவுன்சிலிங் காலை 9 மணி முதல் நடக்கும்.