சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.2 கோடியில் பெருந்திட்டம்
சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.2 கோடியில் பெருந்திட்டம்
ADDED : ஜூன் 27, 2024 01:19 AM

சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்புகள்:
திண்டுக்கல் புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி, கோட்டை நங்காஞ்சியாறு அணைப் பகுதி, மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி அருவி, திருச்சி புளியஞ்சோலை அருவி ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த, 10.20 கோடி ரூபாயில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்
ராமநாதபுரம் தொண்டி கடற்கரை, கன்னியாகுமரி சங்குதுறை, சொத்தவிளை கடற்கரை பகுதி, சூரிய காட்சி முனை; துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளில், 6.50 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்
கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி ஏரிப்பகுதி மேம்பாடு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள புங்கனுார் ஏரி, திருவண்ணாமலை மாவட்டம், தாமரைக்குளம் ஏரியில், படகு குழாம் மற்றும் இதர சுற்றுலாப் பயணியர், 5.70 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் விதமாக, 2 கோடி ரூபாயில் பெருந்திட்டம் தயாரிக்கப்படும்
கோவையில் மருத்துவ சுற்றுலா மாநாடு, 1 கோடி ரூபாயில் நடத்தப்படும்
தமிழகத்தில் நீர் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பணிகளுக்கு, 1 கோடி ரூபாய் செலவிடப்படும்
தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டினம் கடற்கரை, சென்னை அருகில் உள்ள பழவேற்காடு ஏரிப்பகுதி ஆகியவற்றில், 1 கோடி ரூபாயில் சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும்
தமிழகத்தில் கிராமிய சுற்றுலா, வான்நோக்கு சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை, 50 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்
ஊட்டி, குன்னுார், கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஹோட்டல்களை தரம் உயர்த்தும் பணி, 18.80 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அறிவித்தார்.