ADDED : மே 30, 2024 01:38 AM
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில் பாக்கெட், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவற்றை நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.
கடந்த மாதம் பருப்பு, பாமாயில் வாங்க கோரப்பட்ட, 'டெண்டர்' இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இம்மாதம் ரேஷன் கடைகளுக்கு அவை, முழு அளவில் வினியோகம் செய்யப்படாததால், பல கார்டுதாரர்கள் வாங்கவில்லை. எனவே, இம்மாதம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள் ஜூன் முதல் வாரம் வரை வாங்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 20,000 டன் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் பருப்பு; 2 கோடி லிட்டர் பாக்கெட் பாமாயில் வாங்க வாணிப கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது.
ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் டெண்டரை இறுதி செய்து, கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.