ரூ. 25 ஆயிரம் பரிசு: வாங்க இந்திய ஹாக்கி அணி மறுப்பு
ரூ. 25 ஆயிரம் பரிசு: வாங்க இந்திய ஹாக்கி அணி மறுப்பு
UPDATED : செப் 14, 2011 02:10 PM
ADDED : செப் 14, 2011 01:16 PM
புதுடில்லி: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஹாக்கி இந்தியா வழங்குவதாக அறிவித்துள்ள ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகையினை பெற இந்திய ஹாக்கி அணி மறுத்துள்ளது. சீனாவில் நடந்த முதல்ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி ,பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதற்கு நாட்டின்பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி வீரர்கள் ஒவ்வொருக்கும் ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகையினை ஹாக்கி இந்தியா சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகையினை வாங்க இந்திய ஹாக்கி அணி மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹாக்கி இந்தியா சம்மேளனத்தின் பொதுச்செயலர் நரேந்தர்பத்ரா கூறுகையில், எங்களின் இந்த மகத்தான வெற்றிக்கு வெறும் ரூ. 25 ஆயிரம் தானா. இது போதாது என்றார்.