ரூ.200 கோடியில் 2,500 டிரான்ஸ்பார்மர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
ரூ.200 கோடியில் 2,500 டிரான்ஸ்பார்மர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
ADDED : ஜூன் 27, 2024 12:54 AM

சென்னை: ''தரமான மின் வினியோகத்திற்காக, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,500 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படும்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.
சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:
l தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில், பல்வேறு ஊர்களில் தேரோடும் வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள், பூமிக்கடியில் மாற்றி அமைக்கப்படும்
l திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகர், திருச்சி தங்க நகர் ஆகிய இடங்களில், 211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்
l சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிப்பதற்காக, 19 பவர் டிடிரான்ஸ்பார்மர்கள், 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
l சூரியசக்தி, காற்றாலை உள்ளிட்ட பசுமை மின் ஆதாரங்களை கொண்டு தனியார் வாயிலாக, 2,000 மெகாவாட் பசுமை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்
l சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளில் சூரியசக்தி மேற்கூரை நிறுவு திறனை கண்டறிய, 'சாப்ட்வேர்' உருவாக்கப்படும்
l காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தியுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு, புதிய கொள்கை வகுக்கப்படும்
l புதிய நீரேற்று மின் நிலைய திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில், புதிய கொள்கைகள் வகுக்கப்படும்
l மின் வாரிய களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மின் கட்டமைப்புகளில் மின்சாரம் உள்ளதா என்பதை கண்டறியும் எச்சரிக்கை சாதனங்கள், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்
l துாத்துக்குடி அனல் மின் நிலைய நான்காவது அலகில் உள்ள கொதிகலன்களில், எட்டு செறிவூட்டப்பட்ட நிலக்கரி எரிப்பான்கள் 65 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்படும்.
சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்
l தரமான மின் வினியோகத்திற்காக, 2,500 இடங்களில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.