ADDED : ஜூலை 03, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப, இன்று முதல், 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து, இன்று முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குகின்றன. மீதமுள்ள இடங்களை நிரப்பும் வகையில், 2ம் கட்ட சேர்க்கை நடத்தப்படுகிறது.
மாணவர்கள், இன்று முதல் வரும், 5ம் தேதிக்குள், https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில், விண்ணப்பப் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.