ADDED : செப் 03, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில், கிரீன்கோ குழுமத்தை சேர்ந்த கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம், 20,114 கோடி ரூபாய் முதலீட்டில், மூன்று நீரேற்று மின் நிலையங்களை செயல்படுத்த உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசு மற்றும் கிரீன்கோ இடையே ஆக., 21ல் கையெழுத்தானது. இந்த நீரேற்று மின் நிலையங்கள், திருவண்ணாமலை, சேலம், திருப்பத்துார் மாவட்டங்களில், 3,300 மெகாவாட் திறனில் அமைக்கப்பட உள்ளன.
நீர்மின் நிலையத்தில் ஒரு முறை மின் உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் பயன்படுத்த முடியாது.
அதேசமயம், நீரேற்று மின் நிலையத்தில் ஒரு முறை பயன்படுத்திய தண்ணீர், அதிக திறன் உடைய மோட்டார் பம்ப் வாயிலாக, மீண்டும் அணைக்கு எடுத்து செல்லப்படும். அந்த தண்ணீரை பயன்படுத்தி, மழை இல்லாத நேரத்தில், தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்யலாம்.