தென்னந்தோப்பில் சாராய ஊறல் காவலாளி உட்பட 3 பேர் கைது
தென்னந்தோப்பில் சாராய ஊறல் காவலாளி உட்பட 3 பேர் கைது
ADDED : மே 06, 2024 01:14 AM

கூடலுார்: தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் சாராய ஊறல் வைத்திருந்த தோட்ட காவலாளி சரவணன் 45, அவரது தம்பி குமரேசன் 40, ராஜேந்திரன் 55, ஆகியோரை கூடலுார் போலீசார் கைது செய்தனர்.
கருநாக்கமுத்தன்பட்டி தென்னந்தோப்பில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 100 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஊறல் தயாரித்த காவலாளி சரவணன், அவரது தம்பி குமரேசன், ராஜேந்திரனை போலீசார் கைது செய்து, சாராய ஊறலை அழித்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பின் கருநாக்கமுத்தம்பட்டியில் மீண்டும் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அங்குள்ள புறக்காவல் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். கடந்த சில மாதங்களாக கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன.
புறக்காவல் நிலையமும் பூட்டியே கிடக்கிறது. இதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என முன்னாள் மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.