ADDED : மே 06, 2024 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆட்டுக்கிடையில் இருந்த 30 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகின.
அருப்புக்கோட்டை அன்பு நகரைச் சேர்ந்த நல்லகருங்கன் 29, இவர் அருப்புக்கோட்டை - - விருதுநகர் ரோடு தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்தில் கிடை அமைத்து 200 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன் தினம் காலை 10:00 மணிக்கு 30 செம்மறி ஆட்டுக்குட்டிகளை கிடையில் அடைத்து விட்டு, மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி சென்றார். மதியம் 2:30 மணிக்கு வந்து பார்த்த போது கிடையில் தீ பிடித்து அதில் 30 ஆட்டு குட்டிகள் பலியானது தெரிந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.