ADDED : மார் 20, 2026 12:20 AM

அ நிறம் | அளவு
மகிழ்ச்சி பெருகட்டும்
ஈத்துவக்கும் இன்பப் பெருநாளான ரம்ஜான் கொண்டாட உள்ளோம். நோன்பு இருந்து இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம்.
சுவனத்தின் (சொர்க்கம்) பாதையை வலுப்படுத்தி உள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை உணர்ந்திருக்கிறோம்.
புனித ஷவ்வால் மாதம் பிறந்ததும் நோன்பை முடித்து, உண்டு மகிழ்ந்திட மார்க்கம் அனுமதி தந்துள்ளது. பண்டிகை நாளன்று புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் 'ஈத் முபாரக்' வாழ்த்து கூறி, இனிப்புகளைப் பரிமாறி நண்பர், உறவினர்களை உபசரித்து மகிழ்வோம். ஆனால் வரம்பு மீறி செயல்படக் கூடாது.
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
