ADDED : ஏப் 11, 2024 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், 305.36 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று வரை, 144.44 கோடி ரூபாய் ரொக்கம்; 5.13 கோடி ரூபாய் மதுபானம்; 94 லட்சம் ரூபாய் போதைப் பொருட்கள்; 121.77 கோடி ரூபாய் தங்கம், வெள்ளி நகைகள், 33.08 கோடி ரூபாய் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 305.36 கோடி ரூபாய்.

