பார்லிமென்டில் ஒலித்த "ஜால்ரா" சத்தம்: பதவியேற்பில் தமிழக எம்.பி.,க்கள் செய்த கூத்து
பார்லிமென்டில் ஒலித்த "ஜால்ரா" சத்தம்: பதவியேற்பில் தமிழக எம்.பி.,க்கள் செய்த கூத்து
UPDATED : ஜூன் 25, 2024 09:38 PM
ADDED : ஜூன் 25, 2024 02:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் இன்று (ஜூன் 25) பார்லிமென்டில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது சில தமிழக எம்.பி.,க்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ‛ஐஸ்' வைப்பதற்காக கருணாநிதி வாழ்க! திராவிடம் வாழ்க! தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என கோஷமிட்டனர். சில எம்.பி.,க்கள் வாழிய வையகம்! வாழ்க தமிழ்! தலித், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என குறிப்பிட்டனர். சிலர் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றுக்கொண்டனர்.
ஓரிருவர் உதயநிதி வாழ்க எனக் கூறி அவரையும் விட்டு வைக்க வில்லை. கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றார்.