ADDED : செப் 02, 2024 03:56 AM

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக் கல்லுாரியில், கடந்த வாரம் மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது, கோவை சமூக நலத்துறை அலுவலர் கிருஷ்ணவேணியிடம், ஏழு மாணவியர், பேராசிரியர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மகளிர் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சம்பவத்தில், வால்பாறை அரசு கலைக்கல்லுாரி தற்காலிக பேராசிரியர்களாக பணிபுரிந்து வரும் சதீஷ்குமார், 39, ராஜபாண்டின், 35, முரளிராஜ், 33, லேப் டெக்னீஷியன் அன்பரசன், 37, ஆகியோர் மீது, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வால்பாறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.