ADDED : ஜூன் 07, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழகம் முழுதும் அரசு வேலைக்காக, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களின் பெயர்களை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் 31ம் தேதி வரை, 24.63 லட்சம் ஆண்கள்; 28.85 லட்சம் பெண்கள்; 281 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 53.48 லட்சம் பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 10.72 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள். வயது 19 முதல் 30 வரை உள்ள கல்லுாரி மாணவர்கள் 23.27 லட்சம். வயது 31 முதல் 45 வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருப்போர் 16.93 லட்சம்; 46 முதல் 60 வயது வரை முதிர்வு பெற்றவர்கள் 2.48 லட்சம்; 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 7,810 பேர்.
பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.