ADDED : ஜூன் 25, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டசபையில், கேள்வி நேரத்தில் வெளியான தகவல்:
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் முதல் கட்ட மாஸ்டர் பிளான், 36.41 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இரண்டாவது பிளான் விரைவில் அறிவிக்கப்படும்.
கோவில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்ததால், ஆண்டுக்கு 5.79 கோடி ரூபாய் வட்டி கிடைக்கிறது. இத்தொகையில், 13 கோவில்களில் திருப்பணி நடக்கிறது.