ADDED : ஆக 07, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக சுற்றுலா மேம்பாட்டு துறையின் வளர்ச்சி குறித்த ஆய்வுக்கூட்டம், நேற்று சென்னை வாலாஜா சாலையில் உள்ள துறை அலுவலகத்தில், அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
துறை செயலர் சந்திரமோகன், மேலாண் இயக்குனர் சமயமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டு முழுதும், 11.74 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் தமிழகம் வந்த நிலையில், கடந்த ஜன., முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், 6 லட்சத்து, 45,296 பேர் வந்துள்ளனர்.
அதேபோல், கடந்தாண்டு, 28.60 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணியர் வந்த நிலையில், இந்தாண்டு முதல் அரையாண்டில், 15.49 கோடி பேர் வந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.