ADDED : ஆக 01, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தனியார் விமானத்தில், மூன்று பயணியரை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அவர்கள் தங்கள் உள்ளாடைகளில் தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட் மற்றும் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். மூவரையும் கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அடுத்ததாக துபாய் மற்றும் இலங்கையில் இருந்து சென்னை வந்த இரு விமானங்களின் பயணியரை கண்காணித்தனர். அதில், சந்தேகப்பட்ட ஆறு பயணியரை நிறுத்தி சோதனை நடத்தியபோது, ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள், தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையில், எட்டு கிலோ தங்கத்தை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 5.6 கோடி ரூபாய்.