பட்டியலின பெண்களை தாக்கிய தி.மு.க., நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு
பட்டியலின பெண்களை தாக்கிய தி.மு.க., நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு
ADDED : ஜூன் 23, 2024 03:59 PM

ஈரோடு: ஈரோடு அரச்சலூரில் குடிநீர் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின பெண்களை தி.மு.க., பஞ்சாயத்து தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க முயன்ற பெண்ணின் மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தங்க தமிழ்ச்செல்வன் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பூந்துறை சேமூர் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யாதது குறித்து மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் மணிகண்டனின் தாய் மற்றும் மனைவி ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்த போது தி.மு.க ஊராட்சி தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் திட்டி தாக்கி உள்ளார். இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.
தடுக்க முயன்ற பெண்ணின் மகனை, தங்க தமிழ்ச்செல்வன் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளார். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் மீது தகாத வார்த்தைகளால் திட்டுவது, கையால் தாக்குவது, ஆயுதங்களால் தாக்குவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.