சிறுமியர் தூக்கிட்டு தற்கொலை 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு
சிறுமியர் தூக்கிட்டு தற்கொலை 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 30, 2024 09:16 PM
பரூக்காபாத்:உத்தர பிரதேசத்தில், 15 மற்றும் 18 வயது உடைய தலித் சிறுமியரை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாக இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பரூக்காபாத் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 15 மற்றும் 18 வயது உடைய இரண்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் ஜென்மாஷ்டமி நாளான இரவு 10:00 மணிக்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றனர். ஆனால், இருவரும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடி விட்டு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கடந்த 27ம் தேதி மாலை, பழத்தோட்டத்தில் தூக்கில் தொங்கிய இரு சிறுமியர் உடல்கள் மீட்கப்பட்டது. உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை.
சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகார்படி பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108ன் கீழ் அதே கிராமத்தைச் சேர்ந்த இரு வாலிபர்கள் மீது நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இரு சிறுமியரையும், வாலிபர்கள் மிகவும் துன்புறுத்தியுள்ளனர். அதில் ஒருவர் மொபைல் போன் சிம் கார்டு வாங்கி சிறுமியிடம் கொடுத்து தினமும் போனில் பேசும்படி வற்புறுத்தியுள்ளார். அதே சிம் கார்டு சிறுமியர் உடலுக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளது. இரு வாலிபர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்