UPDATED : மார் 31, 2024 10:34 PM
ADDED : மார் 31, 2024 09:42 PM

புதுடில்லி 2047 -ல் வளர்ச்சி அடைந்த பாரதம் தான் நான் தரும் கேரண்டி என பிரதமர் கூறினார்.
தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ஊழல் தடுக்கப்பட்டிருந்தால் இந்தியா வளர்ச்ச்சி அடைந்திருக்கும். இளைஞர்களின் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். இந்த தேர்தலில் இண்டியா கூட்டணியும் பா.ஜ.,கூட்டணியும் வலுவாக உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து எங்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் ராமர் கோயில் கட்டப்பட்டது. ராமர் தொடர்புடைய ஊர்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணம் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.ஸ்ரீரங்கத்தில் பலரை சந்தித்தேன். அவர்களின் கண்களில் உணர்ச்சி மிகுந்திருந்தது.
கூட்டணிகுறித்த வருத்தம் இல்லை
ஜெயலலிதா எனக்கு நல்ல நண்பராக இருந்தார். கூட்டணியில் அதிமுக இல்லையேஎன பா.ஜ. வருத்தப்படுவதறகு எந்த காரணமும் இல்லை .கூட்டணி குறித்து யாருக்காவது வருத்தம் இருக்குமானால் அது அதிமுகவினருக்குதான் இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் கனவுகளை சிதைப்பவர்கள் தான் வருத்தப்பட வேண்டும்.
அண்ணாமலை சிறந்த உழைப்பாளி
தமிழ்நாடு பின்தங்கி விடக்கூடாதென்று அண்ணாமலை பணியாற்றுகிறார். அண்ணாமலை மக்களின் கவனத்தை ஈர்க்கிறார், குறி்ப்பாக இளைஞர்களை ஈர்க்கிறார். அண்ணாமலை சம்பாதிக்க நினைத்திருந்தால் அதிமுக ,திமுக கட்சியில் இணைந்திருப்பார். ஐ.பி.எஸ் பணியை உதறிவிட்டு கட்சி பணிக்கு வந்துள்ளார். அண்ணாமலை சிறந்த உழைப்பாளி .
ஈடி அமைப்பு ஒரு சுதந்திரமான அமைப்பு
ஈடி அமைப்பு ஒரு சுதந்திரமான அமைப்பு அதனுடன் எங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது ஈடியிடம் சுமார் 7,000 வழக்குகள் உள்ளது.அதில் அரசியல்வாதிகளின் வழக்கு 3 சதவீதத்திற்கும் குறைவு. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஈடி செயல்பட்டிருந்தது.அவர்கள் பிடித்த பணம் ரூ.35 லட்சம் மட்டுமே.10 ஆண்டுகளில் நாங்கள் பிடித்த பணம் ரூ.2,200 கோடி. இதன் பொருள் என்ன. இந்த அமைப்பின் ரெய்டுகள் வெளியில் தெரியாது. எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் நடைமுறை ஒன்று தான். பொதுமக்களிடம் இருந்து ஏமாற்றி பறிக்கப்பட்ட பணத்தை இடி திருப்பி தரும் போது மக்கள் அதனை பராாட்டுகிறார்கள். இது வரையில் பிடித்த பணத்தில் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பி தரப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு வருவது புதிதல்ல
தமிழ்நாட்டிற்கு நான் வருவது ஒன்றும் புதிதல்ல.கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் கட்டடப்படும் போது நான் அங்கிருந்தேன். 1975-ல் எமர்ஜென்சியின் போது தலைமறைவாக இருந்த போது தமிழகத்திற்கு வந்துள்ளேன். ஒட்டுமொத்தமாக தமிழகம் பிடிக்கும். குறிப்பாக தமிழ் மொழிபிடிக்கும். உலகம் முழுவதும் இட்லி தோசை பரவி யிருப்பதை போல தமிழ்மொழியும் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பது என் ஆசை.
செங்கொல் நல்லாட்சியை குறிக்கிறது. செங்கோலை பற்றி யாருக்கும் தெரியவில்லை. சுதந்திரத்தி்ன் சாட்சியே செங்கோல் தான். தமிழ்நாட்டில்இருந்து செங்கோல் கிடைத்திருப்பது நாட்டிற்கு பொக்கிஷம் தமி்ழ்நாட்டின் தலைவர்களே செங்கோலை புறக்கணி்த்தார்கள் பலஆய்வுக்கு பிறகு செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் வைக்க முடிவு செய்தேன்.
தமிழக மக்கள் மீதுஎனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் மீது இருக்கும் அதீத அன்பு தான் என்னை அங்கே இழுத்துச்செல்கிறது. தமிழ்நாடு என் நாட்டின் மிகப்பெரிய சக்தி ஆட்சியை யாருக்கு கொடுக்கிறீர்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது எனது கவலையில்லை . நான் ஏதோ அரசியல் திட்டத்தோடுஇங்கு வருகிறேன் என்றுசொல்லாதீர்கள் .
ஓட்டுக்காக நான் உழைக்க வில்லை நாட்டுக்காக உழைக்கிறேன். தமிழ்நாட்டில் மொழி அரசியல் நடக்கிறது.அரசியல் காரணங்களால் தமிழ்மொழியை முடக்கி வைத்துள்ளனர். இதனால் தமிழ்மொழிக்கு பெரிய பாதிப்பு.
நான் எனது கட்சியின் படை வீரன் . கட்சி சொல்லும் இடத்தில் போட்டியிடுகிறேன். இதில் எனக்கு எந்தவிதமான தனி்ப்பட்ட கருத்தும்இல்லை
சுய சார்பு இந்தியாவிற்காக மிகப்பெரிய பாதுகாப்பு முனையம் மற்றும் துறைமுகம் தமிழகத்தில் அமையும் தமிழ்நாட்டு அனைத்து துறையும் நன்றாக உள்ளன.
இவ்வாறு பிரதமர் கூறினார்.

