ADDED : ஜூன் 25, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரந்தையில் துாங்கிய விவசாயி ஜெகநாதன் 55, தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மாரந்தை கிராம கலையரங்க மேடையில் ஜெகநாதன் நேற்று முன்தினம் இரவு துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை விவசாயி ஜெகநாதன் தலையில் கல்லை போட்டும், அரிவாளால் கை, கால்களை வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
காலை அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து இளஞ்சம்பூர் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.