UPDATED : ஏப் 03, 2024 06:05 AM
ADDED : ஏப் 03, 2024 05:48 AM

பிரசாரத்திற்கு வரும் தலைவர்கள், வேட்பாளர்களை பார்க்கவும், அவர்களின் பேச்சை கேட்கவும் மக்கள் திரளுவர். கூட்டத்தை கண்டதும் பேச்சாளர்களுக்கு உற்சாகம் பிறக்கும். 'எங்களுக்கு ஓட்டளித்தால் ஊரில் பாலாறும், தேனாறும் ஓடும்' என, தேனொழுக பேசுவர்; மக்களும் கை தட்டி ஆரவாரம் செய்வர். இதெல்லாம் அந்த காலம்.
இப்போது எல்லாமே ஏறுக்குமாறாக நடக்கிறது. பிரசாரத்திற்கு செல்வோர் யாராக இருந்தாலும், ஏன் முதல்வராக இருந்தாலும் கூட, மக்கள் நேருக்கு நேர் கேள்வி கேட்கின்றனர். கேள்விகளால் துளைத்தெடுக்கும் மக்களை சமாளிக்க முடியாமல், பிரசாரத்தை பாதியில் முடிக்கும் நிலைக்கு பல முக்கியஸ்தர்களே ஆளாகி வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில், அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது தகுதி உள்ளோருக்கு மட்டும் தான்பணம் என, ஆளும் தரப்பினர் கூறி விட்டனர். இந்த பாரபட்சத்தை பற்றி,முதல்வரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய பூ விற்கும் பெண்மணிக்கு, எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

