sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கார் மீது மரம் சாய்ந்து ஒருவர் பலி

/

கார் மீது மரம் சாய்ந்து ஒருவர் பலி

கார் மீது மரம் சாய்ந்து ஒருவர் பலி

கார் மீது மரம் சாய்ந்து ஒருவர் பலி


ADDED : ஜூன் 25, 2024 01:47 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் அருகே கார் மீது மரம் வேருடன் சாய்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்ததால் நேற்று கண்ணுார், காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ' ஆரஞ்ச் அலர்ட்', இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், பாலக்காடு உட்பட எட்டு மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து பாதிப்புகள் ஏற்பட்டன.

கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலம் அருகே வில்லாஞ்சிரா பகுதியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. அப்போது ரோட்டோரம் இருந்த மிகப்பெரிய மரம் வேருடன் சாய்ந்து கார், கேரள அரசு பஸ் மீது விழுந்தது. அதில் காரில் இருந்த இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி அருகே முரிக்கும்தொட்டியைச் சேர்ந்த ஜோசப் 65, இறந்தார். மனைவி அன்னக்குட்டி, மகள் அஞ்சுமோள், மருமகன் ஜோபிஜான் பலத்த காயமடைந்தனர். கார் உருக்குலைந்ததால் அதை வேட்டி அகற்றி அதில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர், போலீசார் மீட்டனர். கோதமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை அனுமதித்தனர்.

கர்ப்பிணியான அஞ்சுமோளுக்கு உடல் நிலை பாதித்தால் அவரை கோதமங்கலத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு திரும்புகையில் குடும்பத்தினர் விபத்தில் சிக்கிய சோக சம்பவம் நடந்தது.

மரம் விழுந்து கேரள அரசு பஸ்சின் பின்பகுதி சேதமடைந்தது. பஸ்சில் பின் இருக்கைகளில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் சில பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

இச்சம்பவத்தால் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.






      Dinamalar
      Follow us