ADDED : ஜூலை 04, 2024 01:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நடிகை ஷாலினி, அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி, 44. திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி, குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இதற்கிடையே, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில், ஷாலினி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
அவருக்கு, என்ன பாதிப்பு போன்ற விபரங்களை, ஷாலினி தரப்பில் இருந்து வெளியிடப்படும் என, மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஷாலினியை, அஜித் உடனிருந்து கவனித்து வருகிறார்.