ADDED : ஏப் 30, 2024 06:04 AM
சென்னை : பயணியர் நெரிசல் மிக்க நான்கு விரைவு ரயில்களில், தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் - சென்னை சென்ட்ரல் இடையே, இரு மார்க்கங்களில் இயக்கப்படும் விரைவு ரயிலில், மே 2 முதல் 30ம் தேதி வரை, தலா ஒரு 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்
புவனேஸ்வர் - எஸ்.எம்.வி.டி - பெங்களூரு இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில், மே 5 முதல் 27ம் தேதி வரை, தலா ஒரு 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்படும்
புவனேஸ்வர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில், இன்று முதல் மே 28வரை தலா ஒரு சிலீப்பர் பெட்டி இணைத்து இயக்கப்படும்
புவனேஸ்வர் - ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில், மே 3 முதல் 31ம் தேதி வரை, தலா ஒரு சிலீப்பர் பெட்டி இணைத்து இயக்கப்படும்.

